
அவிசாவளை மேல் தல்துவ பிரதேசத்தில் நான்கு பேரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் அவிசாவளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதன்படி, துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதோ மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் அவிசாவளையில் இருந்து கேகாலை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியை இலக்கு வைத்து குறித்த துப்பாக்கிச் சூட்டினை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், துப்பாக்கிச் சூட்டுக்கு T-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கரவண்டியில் பயணித்த நால்வர் படுகாயமடைந்துள்ளதுடன் அவர்களில் இருவர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது தல்துவ பிரதேசத்தில் வசிக்கும் 27 மற்றும் 36 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை,காயமடைந்த இருவரும் தல்துவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் 42 மற்றும் 43 வயதுடையவர்கள் எனவும் துப்பாக்கிச் சூட்டுக்கு வந்த சந்தேகநபர்கள் இதுவரையில் கைது செய்யப்படவில்லை என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.