
அண்மையில் அரசாங்க இணையத்தளங்கள் மீதான ransomware இணையத் தாக்குதலிலிருந்து நீக்கப்பட்ட மின்னஞ்சல்களை மீட்பதற்கு வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் சர்வதேச நிறுவனங்களிடம் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு உதவி கோரியுள்ளது.
இதன்படி, தற்போது இறக்குமதியாளருடன் கருத்துக்களைப் பரிமாறி வருவதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவின் சிரேஷ்ட தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் சாருகா தமுனுபொல தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ransomware தாக்குதல் காரணமாக சுமார் 3 மாதங்களாக அரச நிறுவனங்களின் மின்னஞ்சல்கள் நீக்கப்பட்டபோதிலும் அரசாங்க இணையத்தளங்களின் தரவுகள் பாதிக்கப்படவில்லை எனவும் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவின் சிரேஷ்ட தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் சாருகா தமுனுபொல மேலும் குறிப்பிட்டுள்ளார்.