
உரம் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் வழங்கும் பண மானியம் தேவையில்லை என அனைத்து விவசாய அமைப்புகளும் அறிவித்தால், குறித்த பணத்தில் அரிசியை கொள்வனவு செய்ய முடியும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
நேற்று (22) விவசாய திணைக்களத்தின் 25 ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இதன்படி, இலங்கை தேசிய கூட்டு விவசாயிகள் சங்கத்துடன் நடத்திய கலந்துரையாடலில், விவசாயிகளுக்கு அரசாங்கம் வழங்கும் மானியங்கள் தேவையற்றது எனவும், உர மானியமாக செலவிடப்படும் தொகையை நியாயமான விலையில் அரிசி கொள்முதல் செய்ய பயன்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, மானியமாக வழங்கப்படும் பணம் தேவையற்றது என்றால், அனைத்து விவசாய அமைப்புகளும் இந்த யோசனைக்கு உடன்பட வேண்டும் என்றும், சில விவசாய அமைப்புகள் இது குறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்ததுடன் எதிர்வரும் காலங்களில் விவசாயிகளுக்கு உர மானியமாக உரங்களை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் 12,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதகமாவும் மேலும் தெரிவித்தார்.