
மேல் மாகாண பாடசாலைகளில் உள்ள சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழி ஆசிரியர்கள் வெற்றிடங்களுக்கு இலங்கை ஆசிரியர் தரம் 3 ஆம் வகுப்பு (அ) இல் பட்டதாரிகள் சேர்த்துக் கொள்ளப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, 2023 ஆண்டின் இரண்டாம் கட்டத்திற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து குறித்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக 22.09.2023 திகதியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், விண்ணப்பங்களை அழைப்பதற்கான கடைசிதிகதியாக 09.10.2023 எனவும் கல்வி அமைச்சு குறித்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.