
எதிர்வரும் காலங்களில் 13 வகையான பயிர்களை பயிரிடுவதற்கு விவசாய அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, நெல், மக்காச்சோளம், மிளகாய், உருளைக்கிழங்கு, சிவப்பு வெங்காயம், பெரிய வெங்காயம், சோயாபீன் உட்பட 13 வகையான பயிர்களைச் பயிரிடு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நேற்று விவசாய அபிவிருத்தி திணைக்களம் மற்றும் விவசாய திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடியதில் பெரிய உளுந்து சாகுபடியானது 2015ஆம் ஆண்டு 84,737 மெட்ரிக் டன் அறுவடையாக இருந்ததோடு பெருமளவில் குறைந்து தற்போது 7,321 மெட்ரிக் டன்னாக இருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, பயிர் செய்கையை உயர்த்துவதற்கான அவசர வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு விவசாய அமைச்சர் குறித்த கலந்துரையாடலில் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.