
நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளின் சிற்றுண்டிச்சாலைகளை ஒழுங்குபடுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கதின் தலைவர் உபுல் ரோஹன, எதிர்வரும் காலங்களில் அனைத்து பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளையும் பரிசோதனை செய்வதற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டார்.
இதன்படி, “பாடசாலை உணவகங்களை கண்டிப்பாக கண்காணிப்போம் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.
இதேவேளை, பாடசாலை சிற்றுண்டிச்சாலை கொள்கையானது முழுமையான சட்ட ஆவணமாக இல்லாவிட்டாலும், பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் இருந்து பிள்ளைகளுக்குப் பொருத்தமற்ற உணவு வழங்கப்படுவதனால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதை அவதானிக்கின்றோம் எனவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கதின் தலைவர் உபுல் ரோஹன வலியுறுத்தியுள்ளதோடு “பாடசாலை குழந்தைகளுக்கு எந்தெந்த உணவுகள் பாதுகாப்பானவை மற்றும் உணவகங்களில் எந்த உணவுகளை விற்கலாம் என்பதைக் குறிப்பிடும் உணவு விடுதிகளில் விற்கப்படும் உணவுகள் தொடர்பான வழிகாட்டுதல்களின் தொகுப்பை நாங்கள் ஒரு சுற்றறிக்கையில் வெளியிட்டுள்ளோம்.”
மேலும், இது தொடர்பாக பாடசாலை அதிகாரிகள் மற்றும் பாடசாலை உணவகங்களை பராமரிக்கும் நபர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் உணவுச் சட்டத்தின் கீழ் இதற்கு முரணாக செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதில் சில சிக்கல்கள் காணப்பட்டாலும், பாடசாலை மாணவர்களின் சுகாதார பிரச்சினைகளை உருவாக்கும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கதின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். .
எனவே, “எதிர்காலத்தில் பாடசாலை உணவகங்களை நாங்கள் கண்டிப்பாக ஒழுங்குபடுத்துவோம்” என்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கதின் தலைவர் உபுல் ரோஹன மேலும் வலியுறுத்தினார்.