
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நவம்பர் 13ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதன்படி, பிரேரணை நவம்பர் 13 ஆம் திகதி சபையில் முன்வைக்கப்படும் என்றும், மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 13 ஆம் திகதி நடைபெறும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.