
ஆசியாவின் மிகப் பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான பெற்ரோசீனா இன்டர்நேஷனலின் சிங்கப்பூர் பிரிவானது இலங்கைக்கு நான்கு மாதங்களுக்கு டீசல்களை வழங்குவதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த வருடம் நவம்பர் மதம் 01ஆம் திகதி முதல் 2024 பெப்ரவரி மாதம் 29 ஆம் திகதி வரையிலான 4 மாத காலப்பகுதியில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு நான்கு ஏற்றுமதி டீசல்களை கொள்வனவு செய்வதற்கான நீண்ட கால ஒப்பந்தத்திற்கு விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன.
அத்தோடு, ஐந்து ஏலங்கள் பெறப்பட்ட நிலையில், அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட கொள்முதல் குழுவின் பரிந்துரையின் பேரில், பெற்ரோசீனா இன்டர்நேஷனல் (சிங்கப்பூர்) நிறுவனத்திற்கு உரிய கொள்முதல் வழங்குவதற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகரவினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுக்கு, திங்கட்கிழமை (25) அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மேலும், இந்த மாத தொடக்கத்தில், சிங்கப்பூர் எரிசக்தி நிறுவனமான ‘விட்டோல் ஏசியா’ 21 செப்டம்பர் 2023 முதல் 2024 ஜனவரி 21 வரை நான்கு மாதங்களுக்கு பெட்ரோல் 92 ஒக்டேன் நான்கு ஏற்றுமதிகளை இலங்கைக்கு வழங்குவதற்கான கொள்முதல் ஒப்பந்தத்தை வழங்கியது.