
நாட்டின் காலநிலை செழிப்பு திட்டத்தை வெற்றியடைய செய்ய 2030 ஆம் ஆண்டளவில் இலங்கைக்கு 26.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, ‘பேர்லின் குளோபல் உரையாடலில்’ உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கையில் காலநிலை மாற்றத்தைக் குறைத்தல் மற்றும் கடன் மறுசீரமைப்பு ஆகிய இரண்டும் உள்ளதாகவும், குறைந்த பட்ச நிதியைக் கொண்டு நாம் கையாள வேண்டும் என்றும் தெரிவித்தார்.