
இலங்கைக்கு பல வாகன உதிரிபாகங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளித்து வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை தொடர்பில் மீண்டும் கவனம் செலுத்தவுள்ளதாக பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இந்த சுற்றறிக்கை மூலம் 10 ஆண்டுகள் பழமையான லாரிகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
இதன் ஊடாக பழைய வாகனங்கள் இலங்கைக்கு வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதால் நிபந்தனைகள் மீள்பரிசீலனை செய்யப்படும் என பதில் நிதியமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, நீண்ட கால உள்ளூர் நாணய வெளியீட்டு மதிப்பீடு அதன் முந்தைய மதிப்பான வரையறுக்கப்பட்ட இயல்புநிலையிலிருந்து மேம்படுத்தப்பட்டுள்ளது.