
மின்சார மின்கட்டணத்தை அதிகரிக்க அனுமதிக்குமாறு இலங்கை மின்சார சபை மீண்டும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுளா பனாந்து, கோரிக்கை பரிசீலிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இவ்வருடம் எதிர்பார்த்த அளவு நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாமல் போனதால் மின்சார உற்பத்திக்கு கூடுதல் செலவு ஏற்படுவதாகவும், இந்த கூடுதல் செலவுகளை ஈடுகட்ட பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் மின்சார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி நரேந்திர சில்வா தெரிவித்தார். .
அத்தோடு, இந்த ஆண்டு நீர்மின்சாரத் திறன் 4500 ஜிகாவாட் மணிநேரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 3750 ஜிகாவாட் மணிநேரமே எடுக்க முடியும் எனவும் மின்சார சபையின் பொது முகாமையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், இதன் காரணமாக அனல் மின் நிலையங்களில் இருந்து 750 கிகாவாட் மணிநேரம் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விரிவான தரவுகளை எதிர்வரும் திங்கட்கிழமை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் வழங்க மின்சார சபை தீர்மானித்துள்ளாதவம் மின்சார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, மின் உற்பத்திக்கான அதிக செலவு காரணமாக கடந்த காலங்களில் பல தடவைகள் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டது குறிப்பிட தக்க விடையமாகும்.