
(சுஜித் ஹெவாஜூலியால்)
வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்ட 25,000 ஏக்கர் நிலம் விவசாயிகளுக்கு மீள வழங்கப்படும் என வனஜீவராசிகள் அமைச்சர் சட்டத்தரணி பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வத்தேகம – கபிலித்த வனப்பகுதியின் பாழடைந்த பகுதிகளில் உள்ள காடுகள் மீளமைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.