
அண்மைய காலநிலை சீரற்ற காலநிலை காரணமாக அழிவடைந்த விளைநிலங்களுக்கு இயன்றளவு நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதன்படி, வறட்சி மற்றும் கடும் மழை காரணமாக பெருமளவான நெற்செய்கைகள் அழிவடைந்துள்ளதாகவும் வறட்சியினால் ஏற்பட்ட பயிர் சேதங்களை மதிப்பிடும் பணிகள் நிறைவடைய உள்ள நிலையில், மழை மற்றும் வெள்ளத்தினால் ஏற்பட்ட பயிர் சேதங்களையும் மதிப்பிட வேண்டியுள்ளதாக அமைச்சர் அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், எதிர்பாராத காலநிலை மாற்றங்களினால் பெருமளவிலான பயிர்ச்செய்கை நிலங்கள் அழிவடைந்துள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தொடர் மழை பொழியும் என வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவித்திருந்த போதிலும், செப்டெம்பர் மாதம் முழுவதும் மழை பெய்துள்ளதாகவும் அதனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.