
ஒருகொடவத்தையில் உள்ள தரவரிசை கொள்கலன் முனையத்தில் ஒரு கொள்கலனுக்குள் 35 கிலோகிராம் ‘ஹஷிஸ்’ என்கின்ற போதைப்பொருள் தொகை பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை இலங்கை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும், இலங்கை துறைமுக அதிகாரசபையுடன் இணைந்து இலங்கை சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த போதைப்பொருள் கைப்பெற்றப்பட்டுள்ளது.