
மத்திய வங்கியினுடைய முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் முன்னாள் ஜனாதிபதியினுடைய செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, அமெரிக்காவில் வசிக்கின்ற பாகிஸ்தான் நாட்டு பிரஜை ஒருவருக்கு பொதுப் பணத்தினை வழங்கியதாக குற்றம் சாட்டி வண.தினியாவல பாலித தேரராரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த குறித்த வழக்கிலிருந்து அவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.