
லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களின் விலையையும் திருத்த முடிவு செய்துள்ளது.
உலக சந்தையில் நிலவும் தற்போதைய விலைகளைக் கருத்தில் கொண்டு, லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று பிற்பகல் (04) விலையினை அதிகரித்ததினைத் தொடர்ந்து லாஃப்ஸ் எரிவாயு நிறுவனமும் விலையினை அதிகரித்துள்ளது.
இதன்படி, லாஃப்ஸ் காஸ் விலை திருத்தம் பின்வருமாறு:
12.5 கிலோ சிலிண்டர் 150 ரூபாவினை அதிகரித்து புதிய விலையாக 3,985 ரூபாவாக அதிகரித்துள்ளதோடு 5 கிலோ சிலிண்டர் 60 ரூபாவினை அதிகரித்து புதிய விலையாக 1,595 ரூபாவாகவும் 2 கிலோ சிலிண்டர் 4 ரூபாவினை அதிகரித்து புதிய விலையாக 638 அதிகரித்துள்ளது.