
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆர்ப்பாட்ட காலங்களின் போது நாடளாவிய ரீதியில் அவசரகாலச் சட்டங்களை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதியாக இருந்த போது எடுத்த தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பில் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. .
இதன்படி, இன்று (05) காலை நீதிமன்றங்களில் இது தொடர்பான மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே உச்ச நீதிமன்றத்தினால் குறித்த ஆட்சேபனைகள் இருப்பின் இன்று முதல் எட்டு வார காலத்திற்குள் அவற்றை தாக்கல் செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.