
இன்று காலை (06) சபைக்குள் கடும் அமளி ஏற்பட்டதையடுத்து, நாடாளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதன்படி, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு (EPF) செலுத்தப்பட்ட சதவீதங்கள் குறித்து சபையில் எழுப்பப்பட்ட கேள்வியைத் தொடர்ந்து குறித்த பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
இதுதொடர்பான கேள்வியை நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க எழுப்பியிருந்த நிலையில், அதற்கு பதிலளித்த ஆளும் கட்சி, இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு மேலும் கால அவகாசம் கோரியிருந்தது.