
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், பயங்கரவாத எதிர்ப்பு வரைவு சட்டமூலத்தை எதிர்த்து இலங்கை உச்ச நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.
இதன்படி, பாராளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ள வரைவு சட்டமூலத்தின் சில விதிகள் இலங்கையின் அரசியலமைப்பின் கீழ் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறித்த வரைவு சட்டமூலம் அரசியலமைப்பை மீறுவதாக சுட்டிக்காட்டிய மனுதாரர், அதனை பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையுடன் நிறைவேற்றி வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடுமாறும் நீதிமன்றத்தை வலியுறுத்தியுள்ளார்.