
தலங்கமவில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் கொமாண்டோ ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
இதன்படி, ஹன்வெல்லவில் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுடனான மோதலில் குறித்த முன்னாள் கொமாண்டோ சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆகஸ்ட் 25ஆம் திகதி தலங்கமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் தேடப்படும் சந்தேகநபரான குறித்த முன்னாள் கொமாண்ட உயிரிழந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.