
எதிர்காலத்தில் அரச சேவையின் அத்தியாவசியமான துறைகளைத் தவிர வேறு எந்தவொரு அரச துறையிலும் புதிய ஆட்சேர்ப்பு இடம்பெறாது என கைத்தொழில்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
இதன்படி, தற்போதைய பொதுப்பணித்துறை அரசுக்கு தாங்க முடியாத பிரச்சனையாக மாறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
” நாட்டில் 15 லட்சம் அரச ஊழியர்கள் உள்ளனர். நாட்டின் மக்கள் தொகை 21 மில்லியன் ஆகும். மக்கள் தொகையில் 12 பேருக்கு ஒரு அரச ஊழியர் உள்ளதோடு இது உலகின் மிக உயர்ந்த அரச ஊழியர்களின் விகிதங்களில் ஒன்றாகும் எனவும் அரசுக்கு இது பாரிய சுமையாக உள்ளதால் தொடர்ந்து அதனை செய்ய முடியாது” எனவும் கைத்தொழில்துறை அமைச்ச ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.