
2019, 2020, 2021 அல்லது 2022 ஆம் ஆண்டுகளில் கா.பொ,த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான அனுமதியை வர்த்தமானியில் வெளியிட அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன்படி, தற்போது பாடசாலைகளில் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்ற போதிலும், கல்வியமைச்சு உரிய பிரச்சினைகளை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன வலியுறுத்தியுள்ளதுடன் இந்தப் பின்னணியில் நாட்டின் கல்வி முறை வீழ்ச்சியடையும் அபாயம் உள்ளதாகவும் மேலும் எச்சரித்துள்ளார்.