
யாழ்ப்பாணம் பருத்தித்துறை அல்வாய் பகுதியில் இன்று (09) பிற்பகல் கை பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரைப் பிடிக்க முற்பட்ட போது பொலிஸ் அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 27 வயதுடைய சந்தேகநபர், பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு பருத்தித்துறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதன்படி, யாழ்ப்பாணப் பகுதியில் வாள்வெட்டு, திருட்டு உள்ளிட்ட பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படுவதாகவும், அவருக்கு எதிராக பல கைது உத்தரவுகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.