
வைத்தியர்களினால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு 10 டீன்ஸ் வீதி சுகாதார அமைச்சுக்கு முன்பாக போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்படி, வைத்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வை வழங்கத் தவறியமைக்கு எதிராக நாடளாவிய ரீதியில் வைத்தியர்களின் பங்குபற்றுதலுடன் போராட்டம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.