
நாட்டின் நிதி சீர்திருத்த செயற்பாடுகளை சர்வதேச நாணய நிதியம் மற்றும் அமெரிக்கா பாராட்டியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கீதா கோபிநாத் மற்றும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பில், இலங்கையின் முன்னேற்றத்தைப் பாராட்டியதுடன், இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் பூரண ஆதரவையும் உறுதியளித்தார்.
அத்தோடு, இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டுப்பாட்டு முறைகள் தொடர்பிலும் அங்கு கலந்துரையாடப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.