
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அனுராதபுரம் மாவட்ட அலுவலகத்தில் சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்குவது அடுத்த வாரம் இரண்டு நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளதாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பராமரிப்புப் பணிகளைக் கருத்தில் கொண்டு அக்டோபர் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அனுராதபுரம் மாவட்ட அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்படுவதினால் உரிய சேவையைப் பெற மேற்கூறிய திகதிகளில் அலுவலகத்திற்கு வருகைதர வேண்டாம் என்றும், இதற்குப் பதிலாக, மற்றொரு திகதியில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அனுராதபுரம் மாவட்ட அலுவலகத்திற்குச் வருகை தரலாம் எனவும் குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.