
பொலிஸ் மா அதிபரான சி.டி..விக்கிரமரத்னவினுடைய பதவியினை மேலும் மூன்று வாரங்களுக்கு சேவை நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, தற்போதைய பொலிஸ் மா அதிபர் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் திகதி பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வு பெறவிருந்த நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏப்ரல் 06 ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் ஜூன் 26 ஆம் திகதி வரை தனது பதவிக்காலத்தை மூன்று மாதங்களுக்கு நீடித்திருந்தார்.
பின்னர், ஜூலை 09 அன்று, அவருக்கு மூன்று மாதங்களுக்கு இரண்டாவது சேவை நீட்டிப்பு வழங்கப்பட்ட நிலையில் ஒக்டோபர் 09 உடன் முடிவடைந்தது.
குறித்த சூழ் நிலையில் தற்போது மூன்று வாரங்களுக்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.