
இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் ரஞ்சித் ஆண்டகை உச்சநீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, உத்தேச சட்டமூலம் இலங்கையின் அரசியலமைப்பிற்கு முரணானது என அறிவிக்குமாறு கோரி குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு இந்த மனுவில் சட்டமா அதிபர் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.
அரசாங்கத்தால் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இணையவழி பாதுகாப்பு மசோதாவை எதிர்த்து இதுவரை உச்சநீதிமன்றத்தில் மேலும் மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதகவும் இதனை சோசலிச இளைஞர் சங்கம் (SYU), சமூக ஆர்வலர் தரிந்து உடுவரகெதர மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, ஐக்கிய மக்கள் சக்தியின் ரெஹான் ஜயவிக்ரம மற்றும் சுதந்திர மக்கள் காங்கிரஸ் (FPC) உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஆகியோரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அத்தோடு, பல விவாதங்களுக்கு உள்ளான இணையவழி பாதுகாப்பு மசோதாவின் சில அம்சங்களில் பல்வேறு பிரிவுகளின் பின்னடைவை மீறி, அக்டோபர் 03 அன்று, பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் அவர்களால் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
மேலும், செப்டம்பர் 18 ஆம் திகதி அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இந்த மசோதா, நாட்டிற்குள் சில அறிக்கைகளை இணையத்தின் ஊடாக வழங்குவதையும் தடைசெய்யப்பட்ட நோக்கங்களுக்காக ஆன்லைன் கணக்குகளைப் பயன்படுத்துவதைத் தடுப்பதோடு அவர்களை அடையாளம் காணவும் உதவுகின்றது.