
இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையில் அதிகரித்து வரும் மோதல்களுக்கு மத்தியில் பலஸ்தீன மக்களுடன் ஐக்கியமாக நிற்கும் முகமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (16) கொழும்பில் உள்ள பலஸ்தீன தூதரகத்திற்கு விஜயம் செய்தார்.
இதன்படி, பாலஸ்தீன தூதருடனான கலந்துரையாடலின் போது, உலகில் எங்கும் பயங்கரவாதத்திற்கு இடமில்லை என்றும், போர் தீர்வாகாது என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அமைதியான விவாதங்கள் மூலம் இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதன் முக்கியத்துவத்தினையும் போரில் இலங்கையின் சொந்த அனுபவங்ககளையும் பகிர்ந்ததுடன் இரு நாடுகளிலும் உள்ள பொதுமக்கலின் வாழ்விற்கும் நமையாக மாறும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், “பலஸ்தீனத்துடனான ஒற்றுமைக்கான இலங்கைச் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர் என்ற முறையில் நான் பலஸ்தீனுடைய நோக்கத்தை தொடர்ந்து ஆதரித்து வருகிறேன்,” எனவும் யுத்தம் ஒரு போதும் தீர்வாகாது எனவும் முன்னாள் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.