
பொலிஸ் உத்தியோகத்தர்களின் தவறான நடத்தைகள் தொடர்பான முறைப்பாடுகளை ‘118’ என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொது மக்கள் தற்போது முறைப்பாடு செய்ய முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று அறிவித்துள்ளது.
இதன்படி, பொதுமக்கள் பல்வேறு குற்றங்கள் தொடர்பான புகார்களை சமர்பிப்பதற்காக பொது பாதுகாப்பு அமைச்சகத்தால் குறித்த இலக்கம் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.
எவ்வாறாயினும், பொலிஸ் உத்தியோகத்தர்களின் துஷ்பிரயோகம் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு அதே தொலைபேசி இலக்கத்தை இப்போது பயன்படுத்த முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேவைப்பட்டால், பெயர் குறிப்பிடாமல் தகவல்களை வழங்கலாம் என்றும், 24 மணி நேர ஹொட்லைன் மூலம் அளிக்கப்படும் புகார்கள் மூலம் பெறப்படும் தகவல்களின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் என்றும் குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.