
மின்சார விநியோகம், எரிபொருள் விநியோகம் மற்றும் சுகாதார சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க (17) குறித்த அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.
1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் பிரிவு 2 இன் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதுடன் கடந்த செப்டம்பர் 17 ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட வர்த்தமானியில் குறித்த சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டு ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.