
அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆன்லைன் பாதுகாப்பு சட்டமூலத்தை எதிர்த்து, இலங்கையின் உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் 45 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (18) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதன்படி, ஒக்டோபர் 03 ஆம் திகதி பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் அவர்களினால் ஆன்லைன் பாதுகாப்பு சட்டமூலம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டதுடன் செப்டம்பர் 18 அன்று அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஆன்லைன் பாதுகாப்பு மசோதா, நாட்டில் சில அறிக்கைகளின் ஆன்லைன் தகவல்தொடர்புகளைத் தடைசெய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும், உண்மையான மற்றும் நம்பத்தகாத ஆன்லைன் கணக்குகளைப் பயன்படுத்துவதைத் தடுப்பதோடு தடைசெய்யப்பட்ட நோக்கங்களுக்காக, நிதிபெறுதல் வழங்குதல் தவறான விடையங்களை ஒடுக்குதல் அறிக்கைகள் மற்றும் பிற தொடர்புடைய விஷயங்களை தொடர்புகொள்வதற்கான பிற ஆதரவு என்பன குறித்த ஆண்லைன் பாதுகாப்பு மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களாகும்.
இருப்பினும், இந்த மசோதா அதன் சில சிக்கலான அம்சங்களுக்காக விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில் ஆசியா இன்டர்நெட் கூட்டணி ஆப்பிள், பேஸ்புக், கூகுள், அமேசான் மற்றும் யாகூ, சர்வதேச நீதிபதிகள் ஆணையகம், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவை கவலைகளை தெரிவித்துள்ளதோடு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், சோசலிச வாலிபர் சங்கம் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, ஐக்கிய மக்கள் சக்தியின் ரெஹான் ஜெயவிக்ரம மற்றும் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பல்வேறு விதிகளுக்கு சவால் விடுத்து சுதந்திர மக்கள் காங்கிரஸின் உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்ட பல கட்சிகளால் இந்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்ட உடனேயே பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதேவேளை, இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் அமுல்படுத்தப்பட்டால் இலங்கை பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார்.