
அரசின் முடிவின்படி, ஆன்லைன் பாதுகாப்பு மசோதாவின் பல விதிகள் திருத்தப்படும் என சட்டமா அதிபர் இன்று புதன்கிழமை (18) உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதன்படி, குறித்த திருத்தங்கள் குழுநிலையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக குறித்த சட்ட மூலத்தை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் இன்று நீதிமன்றில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிரியந்த ஜயவர்தன, ஷிரான் குணரத்ன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போத சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
அத்தோடு, இணைய பாதுகாப்பு சட்டமூலத்திற்கு எதிராக இதுவரை 50 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மூவரடங்கிய நீதிபதிகள் குழாமின் தலைவர் நீதியரசர் பிரியந்த ஜயவர்தன திறந்த நீதிமன்றில் தெரிவித்துள்ளதோடு இன்று காலை பாராளுமன்றத்தில் உரையாற்றிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, உத்தேச சட்டத்திற்கு எதிராக இதுவரை 45 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.