
நாளை (19) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஐந்து உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச தீர்மானித்துள்ளது.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் மற்றும் உள்ளூர் டின் மீன், பச்சைப்பயறு, துருவல் மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட விலைகள் பின்வருமாறு:
இறக்குமதி செய்யப்பட்ட 425 கிராம் டின் மீன்னுடைய பழைய விலை 650 ரூபாவில் 35 ரூபாவினை குறைத்துள்ளதுடன் உள்ளூர் தயாரிப்பான 425 கிராம் டின் மீன்னுடைய பழைய விலை. 545 ரூபாவில். 5 குறைக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, பச்சைப்பயறு 1 கிலோகிராமினுடைய பழைய விலையான. 1100 ரூபாவில் 20 ரூபா குறைக்கப்பட்டதோடு நெத்தலி கருவடு 1 கிலோ கிராமினுடைய 1090 ரூபாயில் 10 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதுடன் கொத்தமல்லி 1 கிலோ கிராமினுடைய விலையான 540 ரூபாவில் 10 ரூபா குறைக்கப்பட்டுள்ளது.