
நிதியளிப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய பணியாளர் மட்ட உடன்படிக்கையை எட்டுவதற்கு இலங்கை நெருக்கமாக உள்ளதாகவும் வெளிநாட்டு டொலர் பத்திரங்களை வைத்திருப்பவர்களிடமிருந்து கடன் மறுசீரமைப்பு விதிமுறைகளையும் மதிப்பிடுவதக்கவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவின் தெரிவித்துள்ளார்.
இதன்படி, “வருவாயைப் பற்றிய விவாதங்கள் உள்ளன மற்றும் பிற தெளிவுபடுத்தல்கள் செய்யப்படுகின்றன,” என்றும் “விரைவில் ஊழியர்கள் நிலை ஒப்பந்தத்தை எட்டுவோம் என்று நாங்கள் நம்புகிறோம்.” என ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு மற்றும் சீனா எக்சிம் வங்கியுடன் தற்காலிக விதிமுறைகளை ஒப்புக்கொண்ட பிறகு, மற்ற அதிகாரப்பூர்வ கடனாளர்களுடனும், 20% ஹேர்கட் மற்றும் புதிய திட்டத்தைச் சமர்ப்பித்த பத்திரதாரர்களுடனும் பேச்சுவார்த்தையில் நாடு எவ்வளவு முன்னேற்றம் அடைய முடியும் என்பதில் கவனம் செலுத்தவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், பத்திரதாரர் முன்மொழிவில், இலங்கையின் ஆலோசகர் லாசார்ட் “அதைப் பார்த்து ஒப்பிடுவார்” என்றும் சீனாவுடனான விவாதங்கள் தொடர்கின்றன, “எங்கள் கொள்கை வெளிப்படையானதாகவும், ஒப்பிடத்தக்கதாகவும் இருக்கும்,” அதே நேரத்தில் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுடனான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருவதக்கவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
ஆதாரம்: ப்ளூம்பெர்க்
ஏஜென்சிகள்