
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜானக ரத்நாயக்கவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் கொலை மிரட்டல் மற்றும் கப்பம் கோர முயற்சி செய்தமை தொடர்பான விசாரணைகள் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதன்படி, மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டலின் கீழ் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் உரிய விசாரணை நடவடிக்கைகள் உரிய பிரிவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.