
பாராளுமன்றம் அமர்வானது இன்று வியாழக்கிழமை (19) காலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவினுடைய தலைமையில் கூடிய நிலையில் பிரதான நடவடிக்கைகளைத் தொடர்ந்து, வாய்மூலமான விடைக்கான கேள்வி நேரமானது ஆரம்பிக்கப்பட்டு முதலாவது கேள்வியாக எதிர்க்கட்சி உறுப்பினரான அஜித் மான்னப்பெருமவினுடைய கேள்விக்கு பதிலளிக்குமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரினை சபாநாயகர் கேட்டுக்கொண்டார்.
இதன்படி, வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்த நேரமானது முடிவடைந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், கேற்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களினை வழங்காமல் விடைகளை சபைக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்ததினைத் தொடர்ந்து குறித்த விடையத்துக்காக எதிர்ப்புதெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபைக்குள் கூச்சலிட ஆரம்பித்தனர்.
இதேவேளை, கேள்விகளை முன்வைத்திருந்த எதிர்க்கட்சி உறுப்பினரான அஜித் மான்னப்பெரும சபை நடுவில் வந்து செங்கோலினை எடுப்பதற்கு முற்பட்டநினைத் தொடர்ந்து சபையினைக் கட்டுப்படுத்த முடியாமையினால் சபாநாயகர் சபை நடவடிக்கைளினை 10 நிமிடங்களுக்கு தற்காலிகமாக ஒத்திவைத்திருந்தார்.
மேலும், பாராளுமன்றத்தில் செங்கோலை எடுப்பதற்கு முற்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான அஜித் மன்னம்பெரும சபையில் இருந்து வெளியேற்றப்பட்டதோடு நிலையியற் கட்டளையின் பிரகாரம் செங்கோலை தொட்டது குற்றம் என்பதினால் அவர், இன்றிலிருந்து நான்கு வாரங்களுக்கு சபை அமர்வுகளில் கலந்துகொள்வதற்கு சபாநாயகரால் தடையினை விதித்துள்ளார்.