
எஹலியகொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, வாதுவ பிரதேசத்தைச் சேர்ந்த பிரியங்கர டி சில்வா என்ற 42 வயதான பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, அவரது தலைமையகத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளாரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
மேலும், இன்று (21) அதிகாலை 01.00 மணியளவில் இடம்பெற்றதாக நம்பப்படும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பதைத் தீர்மானிக்கும் பொருட்டு, இரத்தினபுரி பொலிஸ் பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டுதலின் கீழ் சம்பவம் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதக்கவும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை அவரது தலைமையகத்திற்கு மற்றுமொரு பொலிஸ் அதிகாரி சென்றா நிலையில் எஹலியகொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுடப்படட நிலையில் இருந்ததாகவும், பின்னர் எஹலியகொட ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டவுடன் இறந்துவிட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளார் மேலும் தெரிவித்தார்.