
இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து பொதுத் தேர்தலும் நடத்தப்படும் என சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று (21) பிற்பகல் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.