
நிதி அமைச்சு பணம் வழங்கும் நிலையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளத் நாங்கள் தயார் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான செயற்பாடுகள் தொடர்பிலான கலந்துரையாடல்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.