
பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தொழிற்சங்கத்தின் இடைநிலை முகாமைத்துவ மட்டம் மற்றும் நிர்வாக சபை ஆகிய இரு தரப்பிலும் எடுக்கப்பட்ட முடிவின்படி இன்று (23) அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.
இதன்படி, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் எதிர்கொண்டுள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வுகாணுமாறு பலமுறை கோரிக்கை விடுத்தும் தீர்வு காணப்படாத நிலையில், ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 22) நடைபெற்ற தொழிற்சங்கக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் கடமையாற்றும்பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்க உறுப்பினர்கள் இன்று வெளியேறவுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சானக போபிட்டியகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரச துறையில் நிறைவேற்று பிரிவில் பொறியியலாளர்கள், வைத்தியர்கள், கால்நடை வைத்தியர்கள் மற்றும் தொழிநுட்ப உத்தியோகத்தர்களாக கடமையாற்றும் பல தொழிற்சங்க உறுப்பினர்கள் தமது பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு காணத் தவறியதைக் கண்டித்து இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.