
தற்போது நடைமுறையில் உள்ள 06 மாதங்களுக்குப் பதிலாக 03 மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணத்தை திருத்தும் பொறிமுறையொன்று உருவாக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று அறிவித்துள்ளார்.
இதன்படி, இலங்கை மின்சார சபையால் வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே மின்சார கட்டணத்தை திருத்த முடியும் என்ற தவறான கருத்து நிலவுவதாகவும், அண்மைக்காலமாக மின்சார கட்டண திருத்தங்களை இலங்கை மின்சார சபை சட்டத்திற்கு அமைய மேற்கொள்ளவில்லை எனவும் பிழையான கருத்துக்கள் நிலவிவருவதாகவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
“வழிகாட்டிககளினைத் தயாரிக்கின்ற போது, நெருக்கடி ஏற்பட்படுமாக இருந்தால் கட்டணக் கோரிக்கையினை முன்வைக்க இலங்கை மின்சார சபைக்கு முழுஅதிகாரம் உள்ளதாகவும் குறித்த முறையைப் பயன்படுத்தி மின் கட்டண திருத்தங்கள் இதுவரை நடத்தப்பட்டுள்ளதாகவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, “தற்போது, இலங்கை முழுவதும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ள நிலையில் சில பகுதிகளில் வெள்ளம் பதிவாகியுள்ள போதிலும், மின்சாரம் உற்பத்தி செய்யும் நீர்த்தேக்கங்கள் அமைந்துள்ள பகுதிகளில் மழைவீழ்ச்சி பதிவாகவில்லை எனவும் அனைத்து நீர்த்தேக்கங்களிலிருந்தும் 65.8% நீரை மட்டுமே மின் உற்பத்திக்கு பயன்படுத்த கூடியதாகவுள்ளதாகவும் இது 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் 22 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட 84.4% நீர் கொள்ளளவை விட 20% குறைவாகும்” எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டினர்.
மேலும், இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான முன்மொழிவு அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் முன்மொழிவு குறித்த விவரங்களை வழங்கிய அமைச்சர், தேவையான ஆவணங்கள் சட்டமா அதிபர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வாரத்தில் அவர்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறோம் என்றும் தெரிவித்தார்.
இதேவேளை, இந்த வாரம் சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைத்தவுடன், அடுத்த வாரம் அமைச்சரவையில் முன்மொழிவு சமர்ப்பிக்கப்படும் என்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.