
இலங்கை கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் பெருமளவான போதைப்பொருளுடன் உள்ளுர் பல நாள் மீன்பிடி இழுவை படகு ஒன்றை கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் தடுத்து வைத்துள்ளனர்.
இதன்படி, அரச புலனாய்வு சேவையின் தகவலின் பேரில், இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையினைத் தொடர்ந்து, ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் பெருமளவிலான போதைப் பொருட்களைக் கொண்ட உள்ளூர் பல நாள் மீன்பிடி இழுவைப்படகு, கடலில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இழுவை படகு மற்றும் கப்பலில் இருந்த ஐந்து சந்தேக நபர்கள் தற்போது கொழும்பு துறைமுகத்திற்கு மேலதிக நடவடிக்கைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.
மேலும், 212 கிலோவுக்கும் அதிகமான ஹெராயின் மற்றும் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் போதைப்பொருளுடன் உள்ளூர் பல நாள் மீன்பிடி இழுவைப்படகு ஒன்றை இலங்கை கடற்படையினர் பிடித்த நிலையில் குறித்த போதைப்பொருளும் மீட்க்கப்பட்டுள்ளது.