
இலங்கையின் மீன்பிடித் தொழிலின் அபிவிருத்திக்காக ஜப்பானிய அரசாங்கம் தமது பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 200 மில்லியன் மானியத்தை வழங்குவதற்கு இணங்கியுள்ளது.
இதன்படி, குறித்த மானியம், தோராயமாக 435 மில்லியன் ரூபா எனவும் இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனத்திற்கான பனி உற்பத்தி இயந்திரங்கள் மற்றும் டிஜிட்டல் தராசுகள், தேசிய மீன்வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கான மீன்பிடி வலைகள் மற்றும் ஆழமான உறைவிப்பான்கள், பொருத்தப்பட்ட இயந்திரங்கள், கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்திற்கு வழங்க எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், இந்த உதவித்தொகையானது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மீனவ சமூகங்களின் வாழ்க்கைத் தரத்தை மேலும் உயர்த்தும் பெறுமதி சேர்க்கும் முயற்சியில், உறைவிப்பான் வசதிகளை மேம்படுத்தி, நவீன உபகரணங்களை வழங்குவதன் மூலம் மீன்பிடித் தொழிலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு குறித்த மானியம் பயன்படுத்தவுள்ளது.