
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சிய விசாரணையின் போது செல்போனில் பதிவு செய்த குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவரின் சட்ட நடைமுறையை 08 மாத காலத்திற்கு இடைநிறுத்துவதற்கு உயர் நீதிமன்றம் நேற்று (24) தீர்மானித்துள்ளது. .
இதன்படி, ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளராகப் பணியாற்றிய எச்.எம்.பி.பி. ஹேரத் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், நீதியரசர்கள் மஹிந்த சமயவர்தன மற்றும் எஸ் துரைராஜாவின் இணக்கப்பாட்டுடன் உச்ச நீதிமன்ற நீதியரசர் புவனேகா அலுவிஹாரே குறித்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
அக்குரஸ்ஸ பிரதேசத்தில் வசிக்கும் சட்டத்தரணி ஒருவருக்கு எதிராகவே இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தீர்ப்பை அறிவித்த நீதிபதிகள், உச்ச நீதிமன்ற விதி 23ன் படி, சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் தனது தொழில்முறை நெறிமுறைகளுக்கு கீழ்படியான செயலை செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளதுடன் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் எட்டு மாத காலத்திற்கு அவரது சட்ட நடைமுறையை இடைநிறுத்துவதற்கு குறித்த பெஞ்ச் தீர்மானித்ததாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.