
உலகின் பல நாடுகளில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கக் கோவையொன்றை நடைமுறைப்படுத்திவரும் நிலையில் குறித்த செயற்பாடுகளை மேற்பார்வை செய்யும் அவ்வாறானதொரு பொறிமுறையை இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமுல்படுத்த சுயாதீன ஆணைக்குழு ஒன்றின் தேவை உணரப்பட்டுள்ளது.
இதன்படி, பிரதமரும் நீதி அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.