
இலங்கை மத்திய வங்கியின் அனுமதிப்பத்திரம் இன்றி நிதி நிறுவனமொன்றை நடத்தி வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, நிதி மற்றும் வணிக குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் 54 வயதுடைய நபரை கண்டி வியூ கார்டன் பகுதியில் வைத்து வியாழக்கிழமை (26) கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர் அங்கீகரிக்கப்படாத நிதி நடவடிக்கை மூலம் 9.9 பில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதுடன் மேற்கூறிய சட்டவிரோத நிதி நிறுவனத்தின் இயக்குநராகவும், பங்குதாரராகவும் பணியாற்றியுள்ளார்.
மேலும், பொலிஸாரின் கூற்றுப்படி, சந்தேக நபர் மீது கிரிமினல் துஷ்பிரயோகம், நம்பிக்கை மீறல் மற்றும் பணமோசடி உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகல் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்ராதாவும் தெரிவிக்கப்படுகின்றது.