
5 ஆவது இளைஞர் பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வு நாளை (28) மற்றும் நாளை மறுதினம் (29) பழைய பாராளுமன்ற மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இதன்படி, 360 உறுப்பினர்களைக் கொண்ட இளைஞர் பாராளுமன்றம் முழு இலங்கையினையும் உள்ளடக்கிய ஒரு தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டுள்ளது.
இதேவேளை, நாளையும் நாளை மறுதினமும் நடைபெறவுள்ள நான்காவது அமர்வில் காலநிலை மாற்றத்திற்கு எதிரான வரவு செலவு திட்டம் மற்றும் இளைஞர் திட்டம் குறித்து இளைஞர்களின் கருத்து மற்றும் முன்மொழிவுகள் விவாதிக்கப்படும் என தேசிய இளைஞர் சேவை மன்றம் மேலும் குறிப்பிடுகின்றது.