
அரிசிக்கு விதிக்கப்படும் அதிகபட்ச சில்லறை விலையினை உள்ளூர் விற்பனையாளர்கள் கடைப்பிடிக்க முடியாவிட்டால் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ எச்சரித்துள்ளார்.
இதன்படி, சந்தையில் அரிசி விலையில் கணிசமான அதிகரிப்பு காணப்பட்ட பின்னணியில் அமைச்சரின் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.
இதேவேளை, உள்ளூர் அரிசி விற்பனையாளர்கள் அரிசிக்கு விதிக்கப்படும் அதிகபட்ச சில்லறை விலையை இனி கடைப்பிடிக்க முடியாது என்று கூறியதுடன், அரிசி விலைகள் உயர்ந்து வருவதற்கு நெல்லின் விலையேற்றம் காரணம் என்று கூறியுள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த விலை அதிகரிப்புக்கு பதிலளித்த வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ, கூடுதல் சுமை ஏதும் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில், தனது உத்தரவின் பேரில் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான சோதனைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்துள்ளார்.