
இலங்கை போக்குவரத்து சபையின் புகையிரதங்கள் மற்றும் பேருந்துகளில் பயணிக்கும் போது விபத்துக்களில் உயிரிழக்கும் நபர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ஐந்து இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி இளைஞன் ஒருவன் ரயிலில் இருந்து தவறி விழுந்த சம்பவம் மற்றும் கடந்த செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதி கொள்ளுப்பிட்டியில் பேருந்து மீது மரம் முறிந்து விழுந்ததில் ஐவர் உயிரிழந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் மூலம் இந்த முன்மொழிவு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, இதுபோன்ற சம்பவங்களால் உயிரிழப்போருக்கு ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது.
எவ்வாறாயினும், செப்டம்பர் 11ஆம் திகதி ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞரின் குடும்பத்துக்கு ஐந்து இலட்சம் ரூபா நட்டஈடு வழங்கப்பட்டதுடன், மரம் முறிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த ஐவருக்கு இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவும் வழங்கப்பட்டது.